சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்
விடுதலை புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்று முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் அனுப்பபட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்
சுமந்திரன் தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்தும் கூறிவருகின்றார் .
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதே போன்று கருத்து கூறியிருக்கின்றார்
நான் மட்டுமன்றி தமிழ் மக்களும் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.சுமந்திரன் விடுதலைபுலிகளுக்கு எதிராக கூறுவதை நிறுத்தல் வேண்டும் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் பதவி வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும்.

இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by Author
on
May 11, 2020
Rating:
Reviewed by Author
on
May 11, 2020
Rating:

No comments:
Post a Comment