மரத்தில் தூக்கில் தொங்கியபடி ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.
கள்ளியங்காட்டை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது தற்கொலையா, கொலையா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரத்தில் தூக்கில் தொங்கியபடி ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Reviewed by NEWMANNAR
on
May 19, 2020
Rating:

No comments:
Post a Comment