சூப்பர் புயலாக மாறும் அம்பன் புயல் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!
அதிதீவிர அம்பன் புயல் மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் சூப்பர் புயலாக உருமாறியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், காற்றானது மணிக்கு 230 முதல் 240 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 265 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 180 முதல் 190 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 210 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 20ஆம் திகதி வரை மத்திய மற்றும் தெற்கு வங்ககடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலைத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூப்பர் புயலாக மாறும் அம்பன் புயல் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Reviewed by NEWMANNAR
on
May 18, 2020
Rating:

No comments:
Post a Comment