புகையிரதம் மோதியதால் விமானப்படை வீரர் பலி........
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவல புகையிரதக் கடவையில், புகையிரதம் மோதி விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று 14 ஆம் திகதி மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது...
வேவல புகையிரதக் கடவை ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த விமானப்படை வீரர் மீது, காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த விமானப்படை வீரர், சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்மலானை விமானப்படை முகாமில் இணைக்கப்பட்டு கடமையாற்றி வந்தவரும், ஹிக்கடுவையைச் சேர்ந்தவருமான 24 வயதுடைய விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Author
on
June 15, 2020
Rating:


No comments:
Post a Comment