ஒரு இலட்சம் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்...
சுபீட்சத்தின் நோக்கு கருத்திட்டத்தை சாத்தியமாக்கும் ஒரு அம்சமாக ஒரு இலட்சம் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க ஒரு இலட்சம் பேருக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் பொறுப்பு தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கிணங்க நிலையான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வறுமையற்ற நாட்டை உருவாக்குவது தொடர்பில் வெற்றிகரமான விசேட திட்டமாக இது அமைந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வறுமை நிலையிலுள்ள குடும்பங்களில் குறைந்த கல்வித் தகைமையுடனுள்ள இளைஞர், யுவதிகளுக்குப் பயனுள்ள வகையில் பயிற்சி வழங்கி நாட்டை கட்டியெழுப்புவதில் பங்களிப்புப் பெறப்படவுள்ளது. பயிற்சியையடுத்து நிரந்தர ஓய்வூதியத்துடனான பதவி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் இளைஞர் யுவதிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பயிற்சித்துறைகள் சில அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட பயிற்சியை தொழிற்பயிற்சி அதிகார சபையூடாக மேற்கொள்கின்றது.
அதற்கிணங்க 6 மாதகாலம் பயிற்சி முன்னெடுக்கப்பட்டு தொழிற் பயிற்சியின் இறுதியில் NVQ 03 சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்படும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தொழில் பயிற்சி திறனபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கண்காணிப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது...

No comments:
Post a Comment