அகதிகளும் மனிதர்களே: ரோஹிங்கியா அகதிகளை மீட்ட இந்தோனேசியர்கள்
இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தின் கடல் பகுதி அருகே தத்தளித்து வந்த 94 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை இந்தோனேசிய அதிகாரிகள் அனுமதிக்க மறுத்த நிலையில், உள்ளூர் மக்கள் அவர்களை மீட்டிருக்கின்றனர்.
சேதமடைந்த படகில் 30 குழந்தைகள் உள்பட 94 அகதிகளை தத்தளித்த சூழலில், உள்ளூர் மீனவர்கள் அவர்களை கரைக்கு நெருக்கமாக அழைத்து வந்திருக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் கரை ஒதுங்க அனுமதி மறுத்து மீண்டும் அவர்கள் கடலுக்குள்ளே அனுப்பப்படுவார்கள் என எச்சரித்து வந்த நிலையில், இவ்விவகாரத்தை தாங்களே கையில் எடுத்து உள்ளூர் மக்கள் அவர்களை கரைக்கு அழைத்து வந்து உதவியிருக்கின்றனர்.
“அரசினால் உதவ முடியாத என்றால், நாங்கள் சமூகமாக அவர்களுக்கு உதவுவோம். ஏனெனில் நாம் மனிதர்கள், ரோஹிங்கியா அகதிகளும் மனிதர்களே, எங்களுக்கு இதயம் உண்டு,” என ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உள்ளூர் வாசி சைபுல் அம்ரி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் உள்ளூர் வாசிகளின் அழுத்தம் காரணமாக, அகதிகள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனையடுத்து இவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக புத்த பெரும்பான்மை நாடாக உள்ள மியான்மரிலிருந்தும் வங்கதேசத்தின் அகதி முகாம்களிலிருந்தும் ரோஹிங்கியா அகதி முகாம்கள் படகு மூலம் வெளியேறி இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைவது தொடர் நிகழ்வுகளாக இருக்கின்றன...
Reviewed by Author
on
June 27, 2020
Rating:


No comments:
Post a Comment