அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மருதமடு மாதா ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பேர் கலந்து கொள்ள முடியும் .....

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும் பின் அதைத் தொடர்ந்து அன்று நடைபெறும் திருப்பலிகளிலும் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

வருடந்தோறும் அரச அனுசரனை ஆதரவுடன் மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் நடைபெறும் ஆடி மாதம் இரண்டாம் திகதி (02.07.2020) பெருவிழா ஆயத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று வெள்ளிக் கிழமை (26.06.2020) மடு ஆலய மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பொனாண்டோ
ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், கிறிஸ்தவ மத அலுவலக அமைச்சிலிருந்து திருமதி சந்துருபிந்து, மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன், மன்னார் மற்றும் மடு பாதுகாப்பு அதிகாரிகள், பொது சௌக்கிய சுகாதார அதிகாரிகள் உட்பட அத்தியாவசிய  சேவைகள் கொண்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இவ் கலந்துரையாடலைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பொனாண்டோ ஆண்டகை, ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத
பெருவிழாவை முன்னிட்டு இன்று  நாங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டத்தை நடாத்தி கலந்தாலோசித்தோம்
.
இவ் கூட்டத்தில் வழமைபோல் இவ் திருவிழாத் திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி (02.07.2020) காலை 6.15 மணிக்கு  நடைபெறும்.

இங்கு திருவிழா நாள் அன்று  நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு பக்தர்கள்
வந்து செல்லலாம். ஆனால்  கோவிட் 19 காரணமாக ஒரு திருப்பலியில் ஆயிரம்
பேர் மாத்திரம் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த திருப்பலிகளுக்கு வருகின்றவர்களை நாங்கள் அழைத்து
நிற்கின்றோம். ஆயிரம் பேருக்கு மேல் இவ் திருப்பலியில் கலந்து கொள்ள
அனுமதி வழங்கப்பட மாட்டாது.

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.30 மணி. 10.30 மணி என வெவ்வேறு நேரங்களில் திருப்பலிகள் நடாத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ஆகவே இதில் பக்தர்கள் வந்து கலந்து கொள்ளலாம்.

பெருவிழா நாளில் மருதமடு மாதாவின் இவ் ஆலயம் வரும் பக்தர்கள் அரசு
மக்களுக்கு தெரிவித்திருக்கும் அறிவுரைகளுக்கு அமைவாக சுகாதாரத்தை
கடைப்பிடித்தவர்களாக முக கவசம் அணிந்தவர்களாக கைகளை நன்கு
கழுவியவர்களாகவும் சமூக இடைவெளியை கவனித்தவர்களாக இவ் விழாவில் கலந்து கொள்பவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திருவிழா நாளான ஆடி இரண்டாம் திகதி அன்று காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருப்பலியானது இவ் விழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்களின் நலன்கருதி ரூபாவாகினி தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பப்படும்போது பக்தர்கள் அதன் மூலம் அன்னையின் ஆசீயை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.....
>விளம்பரத்தை தொடந்து செய்திகள் 











மன்னார் மருதமடு மாதா ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பேர் கலந்து கொள்ள முடியும் ..... Reviewed by Author on June 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.