கள்ளத்தனமாக இயங்கும் லீசிங் கம்பனிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை.......
சுயதொழில் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் ஜயவர்தன சட்ட விரோதமாக நடத்தப்பட்டுவந்த நிதி நிறுவன (லீசிங்) தரகர்கள் கும்பலால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்திருக்கும் பொதுப் போக்குவரத்து, மீள் சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர சட்ட விரோதமாக இயங்கும் அனைத்து நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்கு கொண்டுவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் பதிவு செய்யாமல் கள்ளத்தனமாக நடத்தி வந்த இந்த நிதி நிறுவனத்துடன் தொடர்புபட்ட சகலர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுனில் ஜயவர்தன, நேர்மையானதொரு உழைப்பாளியாகும். அவர் ஒருபோதும் அரசாங்கத்திடம் எதுவும் கோரவில்லை. சக முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்காகவே சேவை செய்தார். சில பண முதலைகள் அவரை படுகொலை செய்துவிட்டனர்.பணத்திக்காக ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயற்பாடுகளை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment