ஆசிரியரின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த சிறுமி...
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த
சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார்
தெரிவித்தனர்.
வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியராஜா மேனகா ( வயது 15 ) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனது
படுக்கையறைக்கு சென்ற சிறுமி கூரையில் சல்வாரின் சோல் துணியில் தூக்கில்
தொங்கிய நிலையில் தாயார் கண்ட நிலையில் உடனடியாக சிறுமியை மீட்டு
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைவழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி தனது பாடசாலை ஆசிரியர் வினாத்தால் செய்யவில்லை என தன்னை
கண்டித்ததாகவும் அதனால் தனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதிவைத்து
விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியரின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த சிறுமி...
Reviewed by Author
on
June 02, 2020
Rating:

No comments:
Post a Comment