திருடுபவர்கள் இப்படியும் திருடுவார்கள்.... ஆட்டோ ஓட்டுனரை ஏமாற்றிய நபர்.......
முச்சக்கர வண்டி ஓட்டுனரை பயணி ஒருவர் ஏமாற்றிய சம்பவம் மல்வானை பகுதியில் இடம்பெற்றுள்ளது..
குறித்த ஓட்டுனர் கூறியதாவது....
வணக்கம் நான் மல்வானையில் இருந்து நான் தச்சு வேலைதான் செய்றது கொரோனா காரணமாக இரண்டு மாதங்கள் வீட்டில் இருந்து வேலை இல்லை குரோனா காரணமாக வேலை இல்லை என்பதனால் ஆட்டோவில் ஹையர் போடலாம் என்று சென்றேன் ஆட்டோவில் ஹையர் போடலாம் என்று சென்றேன் அப்போது கடுவலை சந்தியிலிருந்து ஒருநபர் ஆட்டோவில் ஏறினார் அந்த நபர் என்னிடம் கூறினார் என்னுடைய கார் லோக் ஆகிவிட்டது காரை திறப்பதற்கு திறப்பு உண்டு செய்யவேண்டும் என்று அந்த கடைக்கு போக வேண்டும் என்று கூறினார் திறப்பு வெட்டும் கடை மூடியிருந்தது அர் என்னிடம் கூறினார் கொட்டவையில் உள்ள தனது வீட்டில் காரின் மற்றுமொரு சிறப்பு இருப்பதாக கூறி அங்கு செல்வோம் என்று கடுவலையில் இருந்து சென்றோம் போகின்ற நேரத்தில் நம்பிக்கை ஊட்டும் வகையில் என்னிடம் பலவகையான பேச்சுக்களை கூறினார்அதே நேரத்தில் அவருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தனஅந்த நபர் மூன்று மொழிகளிலும் பேச வல்லமையும் உள்ளவர்தொலைபேசி அழைப்பை பேசிவிட்டு அந்த நபர் என்னிடம் கூறினார் எனது தந்தைக்கு சுகமில்லை அவருக்கு அவசரமாக மருந்து தேவைப்படுகிறது ஆனால் எனது ஃபேஸ் காரினுள் அகப்பட்டால் இந்த மருந்துக்கான சல்லலியை நீங்கள் கொடுங்கள் நான் வீடு போய் தருகிறேன் என்று கூறி பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து 3800 ரூபாய் சல்லியை பெற்றார் அதற்குப்பின்னால் உண்மையிலேயே அவர் பாமசிக்கி போய் மருந்துகளை கொள்வனவு செய்தார்மீண்டும் ஆட்டோவில் ஏறி கொட்டாவை நோக்கி சென்றோம் பார்லிமென்ட் வீதியால் செல்கின்ற போதும் அந்த நபருக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது அந்த நபர் என்னிடம் மீண்டும் கூறினார் வாப்பாவின் கூட்டாளி மார்கல் வந்திருப்பதாகவும் அவர்களுக்கு சாப்பாடு எடுக்க வேண்டும் என்று தலவத்துகெட வீதியில் உள்ள அஜித் பேமிலி ரெஸ்டூரண்ட் சென்றோம் அங்கு ஆட்டோவை நிறுத்தி மீண்டும் அந்த நபர் என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் கேட்டார் சாப்பாடு எடுப்பதற்காக நான் கூறினேன் என்னிடமிருந்த 3800 நூறு ரூபாயை பார்மசியில் மருந்து எடுப்பதற்காக உங்களிடமே தந்தேன் வேறு சல்லி யில்லை என்று கூறினேன்அந்த நபர் மீண்டும் என்னிடம் கூறினார் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் என்னுடைய போனையும் ஐடி கார்டை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார் நான் அதனையும் எடுக்க வில்லை மீண்டும் அந்த நபர் என்னிடம் கூறினார் உங்களுடைய பேங்கில் இருந்தால் எடுத்து தாருங்கள் வீடு அருகாமையில் உள்ளது வீடு சென்று உங்களுடைய சள்லியை மொத்தமாக தருகிறேன் என்று கூறினார் நானும் அதனை நம்பி அருகாமையில் இருந்த சம்பத் ஏடிஎம் சென்று ஏடிஎம் இக்கு உள் செல்லுகின்ற போது அந்த நபர் மீண்டும் கூறினார் மொத்தமாக 5000 ரூபாயை எடுங்கள் வீடு சென்று உங்களுடைய பணத்தை மொத்தமாக தருகிறேன் என்று கூறினார் நானும் அதை நம்பி எடுத்து கொடுத்தேன் ரூ.5000 அதற்குப்பின்னால் மீண்டும் தலாவதுகோட வீதியிலுள்ள அஜித் பேமிலி ரெஸ்டூரண்ட் இருக்கு சென்றோம் அந்த நபர் அவர் பார்மசியில் எடுத்த மருந்துகளை எனது ஆட்டோவில் வைத்து விட்டு அவர் என்னிடம் கூறினார் இந்த மருந்து பொதியை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள் நான் சாப்பாடு எடுத்து வருகிறேன் என்று கூறினார் பின்னர் நான் அந்த இடத்தில் 40 நிமிடங்கள் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன் அவர் வரவில்லை அங்கு இருந்த ஒரு நபரிடம் நான் சென்று விசாரணை செய்தபோது அந்த நபர் கூறினார் இங்கு சாப்பாடு கொடுப்பது இல்லை என்று சொன்னார் எனக்கு இப்போதுதான் சந்தேகம் ஆரம்பித்தது அவர் ஆட்டோவில் வைத்த மருந்து பொடியை பிரித்து பார்த்தேன் மருந்துபொட்டியில் கல் தான் இருந்தது பொட்டியில் கல் தான் இருந்தது ஏமாற்றம் அடைந்த நான் 119 என்ற தொலை அவசர பிரிவுக்கு அறிவித்தேன். சம்பவத்தில் பிறகு மிரிஹான போலீசிலும் இந்த சம்பவத்தை என்று பதிவு செய்தேன். இதனை சரியான முறையில் எழுதிட்டு பதிவிடவும் அண்ணன் பச்சை கலர் டி ஷர்ட் போட்டு பார்மசி குள்ள நிக்கிற நபர்தான் என்னை ஏமாற்றிய நபர்...... என கூறினார்..
திருடுபவர்கள் இப்படியும் திருடுவார்கள்.... ஆட்டோ ஓட்டுனரை ஏமாற்றிய நபர்.......
Reviewed by Author
on
June 01, 2020
Rating:
Reviewed by Author
on
June 01, 2020
Rating:








No comments:
Post a Comment