அண்மைய செய்திகள்

recent
-

அகதிகளை விடுவிக்கக்கோரி வீதியில் உறங்கும் மருத்துவர்கள்.........

ஆஸ்திரேலியாவின் பல்வேறு குடிவரவுத் தடுப்பு முகாம்களில் 1,300க்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, 300 இரவுகளாக வெளியில் தூங்கி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மருத்துவர்கள் ஆஸ்திரேலியாவின் தெற்கு சிட்னியில் உள்ள Wollongong நகரில், கடும் வானிலைக்கு இடையிலும் குடிக்காரர்களுக்கு இடையிலும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் 300 இரவுகள் வீதியில் தூங்கியிருக்கின்றனர்.

அகதிகள் காலவரையின்றி தடுப்பில் வைக்கப்பட்டிருப்பதை முடிவிற்கு கொண்டுவரக்கோரி காலவரையின்றி வீதியில் தூங்குவது என இம்மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 2019யில் இப்போராட்டத்தை தொடங்கினர்.

ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக பரப்புரை செய்துவருக் மருத்துவர்கள் குழு, “இத்தடுப்பு சர்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மீறுகிறது.

பலரின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது, சட்டவிரோதமாக உள்ளது, பொருளாதாரத்தை பாதிப்பை எந்ற்படுத்துகிறது,” எனக் கூறியுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் விடுவிக்கப்படும் வரை, இப்போராட்டம் தொடரும் எனக் 
கூறப்படுகின்றது.

அகதிகளை விடுவிக்கக்கோரி வீதியில் உறங்கும் மருத்துவர்கள்......... Reviewed by Author on June 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.