மலேசியாவுக்குள் வெளிநாட்டினரை கடத்தி வந்ததாக 547 பேர் கைது !!!
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான சுமார் 5 மாதக் காலத்தில் மலேசியாவுக்குள் வெளிநாட்டினரை கடத்தி வரும் ஆட்கடத்தலில் தொடர்புடைய 547 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைதுகள் மூன்று கட்டங்களாக நடந்தாக மலேசிய குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குனர் ஹுசர் முகமது தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1 முதல் மார்ச் 17 வரையிலான காலத்தில் 52 கைதுகளும் மார்ச் 18 முதல் ஜூன் 3 வரையிலான காலத்தில் 124 கைதுகளும் ஜூன் 4 முதல் ஜூன் 7 வரையிலான காலத்தில் 371 கைதுகளும் நடந்துள்ளன.
கடந்த ஜூன் 8ம் தேதி 269 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டதில் 21 பேர் ஆட்கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என ஹூசர் முகமது குறிப்பிட்டுள்ளார்.
ஆட்கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆகிய இருத்தரப்பினரும் உள்ளதாக கூறும் ஹூசர் முகமது, ஆட்கடத்தல் ஏஜெண்டுகளுடன் இயங்கிய மலேசிய அதிகாரிகளும் சிக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதன் மூலம் குடியேறிகளுடனான ஆட்கடத்தல் ஏஜெண்டுகளின் தொடர்புகள் பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment