கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேர்ந்த வடிவேல் வினுஐன் (11) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
வீட்டில் உணவு உட்கொண்டு விட்டு, விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை என்று உறவினர்களின் உதவியோடு தேடியபோது கிணற்றுக்குள் வீழ்ந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை உறவினர்களின் உதவியோடு மீட்டு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது அச்சிறுவன் உயிரிழந்து காணப்பட்டுள்ளான்.
Reviewed by Author
on
June 12, 2020
Rating:


No comments:
Post a Comment