டிக்டாக் செயலியை மீண்டும் இந்திய அரசு அனுமதிக்க வாய்ப்பு...
டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க இந்திய அரசு வாய்ப்பளித்துள்ளது. அதற்கமைய அந்த செயலியை நடத்தி வரும் தனியார் நிறுவனம் எந்த வகையிலும் தனிநபர் தகவல்களை திருடவில்லை என உறுதி அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு விளக்கம் கொடுக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட செயலி மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 15ஆம் திகதி லடாக் பகுதியில் நடந்த இந்திய-சீன போரின் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொலைபேசிகளில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்டிக் டாக் செயலி இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானதென்பதால், இது தடை செய்யப்பட்டது பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் மறுக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அதன் இந்திய தலைவர், தனிநபர் தகவல்களை டிக்டாக் செயலி என்றும் திருடும் செயலில் ஈடுபட்டது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட முப்பது இலட்சம் இந்திய வாடிக்கையாளர்களைக் டிக்டாக் செயலி கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது....
Reviewed by Author
on
July 01, 2020
Rating:


No comments:
Post a Comment