மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்ததுள்ள பாகிஸ்தான்......
மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கராச்சியிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு அழைப்பை ஏற்படுத்திய மர்ப நபர், கடந்த 2008 நவம்பரில் நடைபெற்றதை போன்று தாஜ் ஹோட்டலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறி தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து, மும்பையின் இரண்டு தாஜ் ஹோட்டல்களான கொலாபா மற்றும் பாந்த்ரா அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, தாஜ் ஹோட்டலுக்கு உள்ளேயும் அதன் சுற்றுப்புறங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008இல் தாஜ் ஹோட்டல் உட்பட மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
July 01, 2020
Rating:


No comments:
Post a Comment