பல்கலைக்கழக மாணவர்களின் வரவு மந்த நிலையில்.....
கொரோனா அனர்த்தத்தின் பின்னர் அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகிய நிலையில் மாணவர்களின் வரவு மந்த கதியில் உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுமார் 3 மாத காலங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்ட
நடவடிக்கையின் பலனாக கடந்த 17 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.
எனினும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 3 நாட்கள் கடந்துள்ள போதிலும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் வரவு வீதம் குறைவடைந்துள்ளது.
மேலும் கடந்த காலங்களில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இணையத்தளங்கள் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுமாறு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டதற்கு அமைய பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன...
Reviewed by Author
on
August 21, 2020
Rating:


No comments:
Post a Comment