பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஏ.எல்.எம்.அதாவுல்லா
சகல இனத்தினரும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா எம்.பி. தெரிவித்தார்.
புதிய சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில்
உரையாற்றிய அவர், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான நீங்கள் சபாநாயகராக தெரிவானதை வரவேற்கிறோம்.சிரேஷ்ட எம்.பியான பிரதமர் மஹிந்த ராஷபக்ஷ,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் தெரிவான இந்த பாராளுமன்றத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவாகவில்லை.
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமானது.சகல கட்சிகளின் வாயிலாகவும் மக்கள் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பலமான அரசாங்கம் உருவாகியுள்ளது.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி உகந்த அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.சகல இனத்தினரும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பொன்றை எந்த வெளிநாட்டு தலையீடுமின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்..
Reviewed by Author
on
August 21, 2020
Rating:


No comments:
Post a Comment