பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் சுங்கத்துறை தலைமை அதிகாரி கைது....
லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் அண்மையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு சுங்கத்துறை தலைமை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தின் காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர்.
பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் எனும் வெடிபொருட்கள் வெடித்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடா்பில் அந்த நாட்டு சுங்கத்துறை தலைமை அதிகாரி யிடம் விசாரணகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில் லெபனான் நாட்டு சுங்கத்துறை தலைமை அதிகாரி Badri Daher கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன...
Reviewed by Author
on
August 19, 2020
Rating:


No comments:
Post a Comment