பயங்கரவாதத்தை தடுக்க தவறியதால் மாலியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கைது..........
மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி இப்ராகிம், பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் கைது செய்தனர்.
பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி இப்ராகிம் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வந்ததுடன், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்தது. இந்த நிலையிலேயே அவர் இராணுவத்தினரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் உரையாடிய இப்ராஹிம் பவுபக்கர், தமது பதவியை இராஜினாமா செய்வதாகவும் தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் சிந்துவதை தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் தெரிவிக்கையில், மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறதென குறிப்பிட்டுள்ளார்.
முதலில் ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்...
Reviewed by Author
on
August 19, 2020
Rating:


No comments:
Post a Comment