மன்னார் மாவட்டத்தில் தேர்தல் மிகவும் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளது-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்
மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பாரிய வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் இடம் பெற்றுள்ளதாகவும் நாளைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம் பெறும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
-மன்னார் வாக்கு எண்ணும் நிலையத்தில் இன்று புதன் கிழமை மாலை 5.45 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 675 பேர் இம்முறை வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குகளில் 79.49 வீதமாகும்.இன்று புதன் கிழமை மாலை 5 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியாகி உள்ளது.
-தற்போது வாக்குச் சாவடியில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
-வாங்கு எண்ணும் நிலையமாக உள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்படுகின்றது.மேலும் மொத்தமாக 92 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இன்றைய தினம் மாத்திரம் 30 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் சிறிய முறைப்பாடுகளாகவே காணப்பட்டது.
எனினும் பாரிய பிரச்சினைகள் எதுவும் இடம் பெறவில்லை.பொலிஸாரின் உதவியுடன் முறைப்பாட்டு அதிகாரிகள் சென்று தீர்வு கண்டுள்ளனர்.
-தேர்தல் மிகவும் சுமூகமான முறையில் மன்னாரில் இடம் பெற்றுள்ளது.15 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம் பெறவுள்ளது.
-ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் பிரதான வாக்கு எண்ணும் அலுவலகரின் பிரதி பிரதான வாக்கு எண்ணும் அதிகாரியிடம் வாக்கு பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டு சீல் பன்னப்பட்டு இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதன் திறப்புக்கள் கட்டுப்பாட்டு அரைக்கு ஒப்படைக்கப்படும்.
இன்று முழுவதும் பாதுகாக்கப்பட்டு நாளை வியாழக்கிழமை காலை 7 மணியளவில் பிரதி பிரதான வாக்கு எண்ணும் அலுவலகரினால் பிரதான வாக்கு எண்ணும் அலுவலகரிடம் ஒப்படைக்கப்படும்.
அதன் பின்னர் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகியதுடன் மணித்தியால்ததிற்கு ஒரு தடவை நிலமைகள் தொடர்பாக அறியத்தர முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(05-08-2020)
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் மிகவும் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளது-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்
Reviewed by Author
on
August 05, 2020
Rating:
No comments:
Post a Comment