யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. நெடுங்குளம் கொழும்புதுறையைச் சேர்ந்த 25 வயதுடைய கவிச்சந்திரன் சிவனேஸ்வரன் என்பவருக்கே இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
பழைய பகையைத் தீர்க்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
Reviewed by Author
on
August 20, 2020
Rating:

No comments:
Post a Comment