வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு....
டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு
தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் இன்று (15)
வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில்,
அவர்களது சொந்த இடங்களான கம்பஹா, கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, களுத்துறை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த பயணிகளிற்கான பி.சீ.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் , கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று
உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கடந்த 3ஆம் திகதி டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு
தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
Reviewed by Author
on
August 15, 2020
Rating:


No comments:
Post a Comment