தேர்தலை அடுத்து ஸ்வெட்லானா லித்துவேனியாவுக்கு வெளியேற வேண்டிய கட்டாய நிலை......
நாடுகடத்தப்பட்ட பெலரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரணிகளுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்,
சர்ச்சைக்குரிய தேர்தலை அடுத்து அவர் லித்துவேனியாவுக்கு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் அமைதி பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
1994 முதல் பெலரஸை அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆண்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து அவர் விலக வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு போரட்டங்கள் இடம்பெற்றன.
தேர்தலை அடுத்து சுமார் 6,700 பேர் கைது செய்யப்பட்டதோடு மேலும் பலர் பாதுகாப்பு அதிகாரிகளினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 80.1% வாக்குகளையும், ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயா 10.12% வாக்குகளையும் பெற்றதாக மத்திய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயா நாடுகடத்தப்படுவதற்கு முன்னர், தேர்தல் குறித்து முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோது திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் “அமைதி போராட்டங்களை” ஏற்பாடு செய்ய மாநகர முதல்வர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்..

No comments:
Post a Comment