நுவரெலியா – ஹட்டன் வீதியில் விபத்தில் மாணவர்கள் உட்பட 7 பேர் காயம்!
நுவரெலியா – ஹட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (13) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்ததோடு, பேருந்துக்காக தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர்கள் மூவருடன் பெண் ஒருவரும் காயமடைந் நிலையில் சிகிச்கைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து தரிப்பிடத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
September 13, 2020
Rating:


No comments:
Post a Comment