வவுனியா விபத்தில் சிறுவன் பரிதாப உயிரிழப்பு!
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இ.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்துள்ளார். இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில், சிறுவனின் சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்
Reviewed by NEWMANNAR
on
September 13, 2020
Rating:


No comments:
Post a Comment