சுமந்திரன், சிறிதரன் தொடர்பில் முறைப்பாடுகள் - நடவடிக்கை விரைவில்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சிவஜானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, எம்.ஏ. சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே சி.வி.கே.சிவஜானம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
குறித்த விடையம் தொடர்பில் சி.வி.கே.சிவஜானம் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவர் அந்த கடிதத்தினை அனுப்பியுள்ளார். அந்த கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.
அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் சமர்ப்பித்து, விடையங்களை ஆராய்ந்து, அந்த குழுவில் யார் யார் இருக்கின்றார்கள் என ஆராய்ந்து தீர்மானித்து அது பரிசீலிக்கப்படும்.
ஆனால் அது மட்டும் இல்லை ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது.
சுமந்திரன், சிறிதரன் மற்றும் குனாளனுடைய முறைப்பாடுகள் என பல முறைப்பாடுகள் இருக்கின்றது. எனவே இந்த விடையங்கள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சுமந்திரன், சிறிதரன் தொடர்பில் முறைப்பாடுகள் - நடவடிக்கை விரைவில்!
Reviewed by NEWMANNAR
on
September 13, 2020
Rating:

No comments:
Post a Comment