ஒட்டுசுட்டான் பகுதியில் கோர விபத்து - 12 பேர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் மாங்குளம் நோக்கிய திசையில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று வீதியை கவனிக்காது திடீரென மீண்டும் முல்லைத்தீவு பக்கமாக திரும்ப முற்பட்ட வேளை, மாங்குளம் நோக்கி வருகை தந்த வாகனம் குறித்த வாகனத்துடன் மோதி பாரிய அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது வாகனத்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by NEWMANNAR
on
September 13, 2020
Rating:


No comments:
Post a Comment