வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது-
வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ள நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் சனிக்கிழமை(12) மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித்த றுவான் குணவர்த்தன (வயது-36) என்ற நபர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு குறித்த தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் குறித்த நபர் இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
-குறித்த நபரை மீண்டும் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது-
Reviewed by NEWMANNAR
on
September 13, 2020
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 13, 2020
Rating:


No comments:
Post a Comment