மன்/ சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் GCE( O/L )2020 மாணவர்களுக்கான கணிதபாட மாதிரி வினாத்தாள் புத்தக அன்பளிப்பு
2020 ஆம் ஆண்டு அச்சுறுத்தல் மிகுந்த தொற்று நோயின் முடக்கத்தினால் நீண்ட நெடிய கல்வி கற்றல் இடைவெளியை கருத்தில் கொண்டு மன்னார் யதீஸ் புத்தக சாலையின்
" மன்னார் மாவட்ட அயனிஷ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தின்" பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்களினால் மன்/ சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் GCE O/L 2020 மணவர்கள் 91 பேருக்கும் 350/= ரூபா பெறுமதியான எதிர்பார்க்கை 5 மாதிரி வினாத்தாள் அடங்கிய கணித பாட பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வானது 10/9/2020 வியாழக்கிழமை அன்று காலை ஒன்றுகூடலின்போது கல்லூரியின் தற்போதைய பொறுப்பு நிலை அதிபராக செயற்படும் திருமதி P.I.குரூஸ் அவர்களின் தலைமையில் கல்லூரியின் உப அதிபர் திருவாளர் வி.மயூரன் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பில் இனிதே GCE O/L 2020 இல் பரீட்சை எழுதும் 91 மாணவர்களுக்குமான புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:
Post a Comment