ஆற்றில் தோணி கவிழ்ததில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் வெருகல் ஆற்றுப் பகுதிக்கு அப்பால் உள்ள தனது காணியில் சேனைபயிர் செய்கை செய்து வருவதாகவும் வழமை போல சம்பவதினமான இன்று காலை தோணியில் சேனைப்பயிர் செய்கை பகுதிக்கு ஆறில் ஊடாக தனிமையில் பயணித்த போது தோணி கவிழ்ததில் ஆற்றில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றில் தோணி கவிழ்ததில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment