உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு!
நோர்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைக் பெறுவார்கள்.
இதற்கமைய பண பரிசு இந்த ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்களாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நோபல் அறக்கட்டளையின் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘எங்கள் செலவுகள் மற்றும் மூலதனம் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட வழியில் நிலையான உறவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு ஊக்கமளிப்பதிலும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிப்பதிலும் பரிசு பெற்றவர்களின் சாதனைகளை கொண்டாடுவது இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் அறக்கட்டளையின் நிதிநிலைமையைப் பொருத்து அவ்வப்போது பரிசுத்தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது.
2012ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அதன் முதலீட்டு மூலதனம் 3 பில்லியன் க்ரோனரிலிருந்து 4.6 பில்லியன் க்ரோனராக உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீதம் அதிகரிப்புக்கு அருகில் உள்ளது.
முன்னதாக நோபல் அறக்கட்டளையின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 2011ஆம் ஆண்டில் நோபல் பரிசுத் தொகை குறைக்கப்பட்டிருந்தமை நினைவுக்கூறத்தக்கது.
இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசு வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
.
.
உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு!
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment