'தற்கொலை கோழைத்தனம்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு பூசகர் தூக்கிட்டு தற்கொலை - மட்டக்களப்பில் சோகச் சம்பவம்
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் சுமதிபால-சுமணபால எனும் 37 வயதுடைய ஒரு பூசகர் ஆவார். இவருக்கு திருமணம் முடித்து இரு பிள்ளைகள் உள்ளதாகவும் சம்பவ தினத்தன்று அவர் தனது கைபட எழுதிய கடிதமொன்றில் தற்கொலை கோழைத்தனம்; இருந்தும் நான் இந்த முடிவினை தனிப்பட்ட ரீதியாக எடுத்துள்ளதாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளதாகவும்.
விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை-ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
'தற்கொலை கோழைத்தனம்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு பூசகர் தூக்கிட்டு தற்கொலை - மட்டக்களப்பில் சோகச் சம்பவம்
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment