பிக்பொஸ் சீசன் 4 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை போட்டியாளர்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ காட்சிகள் அவ்வவ்போது வெளியாகி இரசிகர்களை கவர்ந்துள்ளன.
இதன்படி நேற்று வெளியாகிய ப்ரோமோ காட்சியில் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முதல் நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் அறிமுகம் இருக்கும் என்பதால் ஒக்டோபர் 4ம் திகதி மட்டும் மாலை 6 மணிக்கே நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்பொஸ் சீசன் 4 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment