ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலையின் துணைவேந்தர் நியமனம்! – வர்த்தமானி வெளியீடு
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியில், “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட “இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி” க்கு, அமைச்சுக்களுக்கும், இராஜாங்க அமைச்சுக்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் நேற்று முன்தினம் 22ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நியமனம் செய்யப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது
.
.
ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலையின் துணைவேந்தர் நியமனம்! – வர்த்தமானி வெளியீடு
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment