நிதி நிறுவனத்தில் கத்திக்குத்து; பெண் பலி
இச்சம்பவம் இன்று (26) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனது கணவருடன் குறித்த கடன் வழங்கும் நிதி நிறுவனத்திற்கு முச்சக்கரவண்டியில் வருகை தந்து, கணவருக்கு முகக்கவசம் இல்லாததினால் தனது பிள்ளையை வைத்துக்கொண்டு முன்னால் நின்றபோது, இனந்தெரியாத நபரொருவர் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து குறித்த பெண் மீது கத்தியால் குத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹொரவபொத்தானை, 122 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட லேவாசபிரிவெவ பியதாசகே தம்மிகா பிரியதர்ஷினி (34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹொரவபொத்தானை பொலிசார் தெரிவித்தனர்.
நிதி நிறுவனத்தில் கத்திக்குத்து; பெண் பலி
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment