மன்னார் மடு மழுவராயன் கட்டையடம்பனில் இரயில் பாதையோர வீடுகள் அதிர்வினால் இடிந்து விழும் நிலை -Photos
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மழுவராயன் கட்டையடம்பன், அடம்பன் கிராம அலுவலக பிரிவில் இரயில் பாதையோர வீடுகள் அதிர்வினால் இடிந்து விழும் நிலை
இரயில் பாதையில் இருந்து அங்கிருந்து 30 மீட்டர் தூரத்தில் வீடு ஒன்று அமைந்துள்ளது. இவ் வீடானது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணியில் சர்வோதய நிறுவனத்தால் கட்டி கொடுக்கபட்டதாகும்.
இவ் வீடானது ரயில்கள் செல்லும் போது அதனால் ஏற்படும் அதிர்வில் வெடிக்கின்றது இதனால் சமையல் அறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியதால் சமைப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றார் உரிமையாளர்
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளும் இவ் நிலையிலேயே காணப்படுகின்றது . இதனால் மக்கள் பெரும் ஆபத்தான நிலையை எதிர் கொள்கின்றனர் மற்றும் இவ் ரயில் பாதைக்கு பாதுகாப்பு கடவையும் இல்லாத காரணத்தினால் இப் பாதையை பயன்படுத்தி பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அசெளகரியங்களிற்கு முகங்கொடுக்கின்றனர்.
இது தொடர்பாக மடு பிரதேச செயலாளரிற்கு அறிவிக்கபட்ட போது அப் பிரதேச செயலாளர் எவ் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அத்துடன் அனத்த முகாமைத்துவ பிரிவும் இப் பகுதியில் உள்ளது அவர்களும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்
பலரின் அசமந்த போக்கினால் மக்களின் வீடுகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது இதனால் உயிர்களிற்கும் ஆபத்தான நிலை ஏற்படாலாம்.
மடு பிரதேச செயலாளலாரே,அரசியல் வாதிகளே இது உங்களின் கவனத்துக்கு

No comments:
Post a Comment