மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் 902 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது.
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் நேற்று முந்தினம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்ட விரோதமாக கடல் வழியாக மன்னார் பகுதிக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 902 கிலோ உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகள் மீட்கப்பட்டுள்ளதோடு இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தாழ்வுபாட்டு கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான படகினை கடற்படையினர் சோதனையிட்டனர். இதன் போது 19 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 902 கிலோ கிராம் மஞ்சள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் படகில் இருந்த 02 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 48 வயதுடைய மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சள் பொதி யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் மஞ்சள் தூள் பதுக்கி வைக்கப்பட்டு 3500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் 902 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது.
Reviewed by NEWMANNAR
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment