சட்டமாகிறது சுகாதார ஒழுங்கு விதிகள்: 'கைது மற்றும் சிறை' வர்த்தமானி வெளியிட சுகாதார அமைச்சர் ஆலோசனை!
நாட்டில் பாரியளவில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகாதிருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக காணப்படுகின்றது.
எனினும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவரைபு திணைக்களத்திலிருந்து சட்டமூலம் கிடைத்தவுடன் இரு நாட்களுக்குள் அதனை வர்த்தமானியில் வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்படுவோருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவரும் தொற்றுக்குள்ளானோருடன் பழகியவர்களில் 101 பேரும் அடங்குகின்றனர்.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று நிலைமை தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் முகாமையாளர் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் ஆராயப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டமாகிறது சுகாதார ஒழுங்கு விதிகள்: 'கைது மற்றும் சிறை' வர்த்தமானி வெளியிட சுகாதார அமைச்சர் ஆலோசனை!
Reviewed by Author
on
October 11, 2020
Rating:
Reviewed by Author
on
October 11, 2020
Rating:


No comments:
Post a Comment