மட்டக்களப்பில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கருவப்பங்கேணி அம்ரோஸ் வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அதிக விலையில் நபர் ஒருவர் மதுபானம் விற்பனை செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கருவேப்பங்கேணி அம்ரோஸ் வீதியிலுள்ள வீடு ஒன்றை சோதனை செய்த போது கட்டிலுக்கு அடியில் ஒழித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கால் மதுபான போத்தல்கள் 112, சுமார் 20 . 160 மில்லி லீட்டர் பெறுமதியான மதுபான போத்தலுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார் .
மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான , சொர்ணபால, ராஜ்மோகன், சுது மின்சன், பண்டார, சந்தன, பிரேமரட்ண ஆகிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக நாளை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
Reviewed by Author
on
October 11, 2020
Rating:
Reviewed by Author
on
October 11, 2020
Rating:


No comments:
Post a Comment