அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் சிறப்பு குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்டபம் அடுத்த வேதாளை மீனவ கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ராமேஸ்வரம் துனை காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவீஸ்ச் தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

 அப்போது வேதாளை கடற்கரை பகுதியில் உள்ள தோட்டத்தில் சோதனை செய்த போது அங்கு கடல் அட்டைகள் உயிருடனும் பதப்படுத்திய நிலையிலும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் வருவதை அறிந்த கடத்தல் காரர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர். ஆனால் சம்பவ இடத்தை போலீஸார் சோதனை செய்த போது தப்பி ஓடிய நபர்கள் குறித்த தகவல்கள் சில கிடைத்ததையடுத்த மண்டபம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். 

 மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 25 இலட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தேடப்பட்டு வரும் சர்வதேச கடத்தல்காரர்கள் சிலர் குறித்த தகவல்கள் அந்த தோட்டத்தில் இருந்து கைப்பற்றபட்டதால்; மாவட்ட காவல் துறை கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.





மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.