மட்டக்களப்பில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்! நாசமாகிய பல கோடிகள்
குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட பாரிய தீயினைக் கட்டுப் படுத்த பொலிசாரும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினரும் பாரிய முயற்சியினை மேற்கொண்ட போதிலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயைக் கட்டுப்பாட்டினுள் கெண்டுவர முடியாது பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.
மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு முகவர் நிலையமுமாகும். இதனால் அயலவர்கள் தமது வீடுகளை விட்டு சில மணிநேரம் வெளியேறியதையும் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான பாதையை மூடிய பொலிசார் போக்கு வரத்திற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தினர்.
மட்டக்களப்பில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்! நாசமாகிய பல கோடிகள்
Reviewed by Author
on
November 03, 2020
Rating:

No comments:
Post a Comment