பல கோடி மதிப்பிலான விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு!
இலங்கை கடற்பரப்பிற்குள்ளான மன்னார் மாவட்ட எல்லை மற்றும் ஊர்காவற்றுறை எல்லைப் கடற்பபரப்பிற்குள் அனுமதியின்றி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மாவட்ட மீன் வளத்துறையனரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் 94 படகுகளும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 27 படகுகள் என மொத்தமாக 121 விசைப்படகுகள் அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியினை யாழ்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் அனுமதி வழங்குயுள்ளது.
மேலும் இலங்கை கடற்பரப்பிற்குள் 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் 37 படகுகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விசைப்படகுகளை விடுவிக்க 2018ம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியையடுத்து தமிழகத்தில் இருந்து இலங்கை வந்த மீனவ அமைப்புக்கள் 10 படகுகளை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
தமிழகத்திற்கு எடுத்த செல்ல முடியாத படகுகளை அங்கையே விட்டுவிட்டு சென்றனர். இந்த நிலையில் விசைப்படகுகளை அழிப்பதற்க்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் படகுளை விடுவிக்க உத்தரவிட்டது. படகை மீட்க சென்ற தமிழக மீனவ குழுக்களால் 40 படகுகள் மட்டுமே மீட்க முடிந்தது.
எஞ்சிய 121 படகுகள் மீட்க முடியாமல் போன நிலையில் இலங்கை அரசு தமிழக படகுகளை தமிழக மீனவர்கள் மீட்டு எடுத்து செல்லுமாறு உத்தவிட்டுடிருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொறறு; காரணமாக தமிழக மீனவர்கள் படகுகளை மீட்க செல்ல முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டது. இதனால் இலங்கை நீதிமன்றம் படகுகளை அழிக்கும்மாறு உத்தரவிட்டுயிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழக விசைப்படகுகளை இலங்கை அரசு வீணடிக்காமல் மீண்டும் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளதாகதெரிவித்தார்
பல கோடி மதிப்பிலான விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு!
Reviewed by Author
on
November 08, 2020
Rating:

No comments:
Post a Comment