நாட்டை முடக்காமைக்கான காரணத்தை தெளிவுப்படுத்திய ஜனாதிபதி
கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவது தொட்பான கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
´சுகாதார அதிகாரிகள் கொவிட் தொற்றாளர்களுடன் இருந்த போதிலும் அவர்களுக்கு தொற்று ஏற்படாமைக்கு காரணம் அவர்கள் உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதலாகும்.
அவர்களை போல சுகாதார வழிமுறைகளை ஏனையோரும் கைக்கொண்டால் நாட்டை சிறப்பான முறையில் முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும். முக்கியமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை உரியவாறு கடைப்பிடித்தால் நாட்டை முடக்க அவசியமில்லை. நாட்டை முடக்கினால் அன்றாடம் உழைத்து வருமானம் பெறுபவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். ஆகவே குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மாத்திரம் கவனத்தில் கொண்டு நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியாது. அனைத்து பிரிவினர் தொடர்பிலும் கவனம் செலுத்தி இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்.´என்றார்.
நாட்டை முடக்காமைக்கான காரணத்தை தெளிவுப்படுத்திய ஜனாதிபதி
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment