அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவர்

நேற்று பிற்பகல் 3 ஆம் திகதி கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு பணிக்குழு அமர்வின் போது, கொவிட் தொற்று நோயளர்களை கண்டறியும் நிலை, அதன் புதிய முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. நொப்கோவின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் டொக்டர் அசல குணவர்தன ஆகியோரின் இணைத் தலைமையில் பணிக்குழு கூட்டம் இடம்பெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

 மையத்திற்கு வருகை தந்த புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அர்களை வரவேற்ற பின்னர், குறித்த பணிக்குழு கூட்டத்தில் மினுவங்கொடை மற்றும் மீன் சந்தையில் ஏற்பட்ட தொற்றுநோய் பரவல் மற்றும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியமையினை தொடர்ந்து ஹெமத்துகம, மாவனெல்லை,புலத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுகள், கேகாலை மாவட்டத்திலுள்ள கலிகமுவ பிரதேச சபை பிரதேசம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிரியுல்ல பொலிஸ் பிரிவு உள்ளிட்ட பல கிராமங்களில் திங்கள்கிழமை (2) மாலை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதித்தமை தொடர்பாக ஆராயப்பட்டன.

 புதிய மூலோபாயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய முதல் மற்றும் இரண்டாவது தொடர்புகளை பேணிய 6593 நபர்கள் தற்பொழுது தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் ஏராளமானோர், தங்களது இருப்பிடங்கள் மற்றும் வேளைத்தளங்கள் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்குள்ளானதையடுத்து ஐக்கிய அரபு இராஜ்ஜியமான துபாய் நகரத்தில் அவர்கள் பாதுகாப்பான வீடுகளில் சிரமத்தில் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 அதிமேதகு ஜனாதிபதியவர்களின் பணிப்புரையின் பேரில், அவர்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. "இதுவரை முப்படையினரால் நிர்வகிக்கப்பட்ட 72 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் அதே நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையானது, அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்ற அடுத்த இரண்டு நாட்களில் அது செயல்படுவதை நிறுத்திவிடும் என்பதனால் இந்த அவசர நடவடிக்கை அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. வீட்டிற்கு வரும் வெளிநாட்ட்டிலுள்ள இலங்கையர்களுக்காக இதுபோன்ற இடங்கள் எளிதில் பயன்படுத்தப்படலாம் ”என்று லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறினார். 

 அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம், வைரஸால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இலக்கு குழுக்களை உள்ளடக்கியதாக ஒரு நாளுக்குள் பி.சி.ஆர் சோதனைகளை நிறைவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது, மேலும் சோதனைகள் குழுக்களாக நடத்தப்பட உள்ளன என்று நொப்கோவின் தலைவர் விளக்கினார். ரூ .5000 கொடுப்பனவு செலுத்துதல், நோயாளிகளுக்கு வீட்டுக்கு மருந்து வழங்கல், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளின் இறுதிக்கட்டத்திலுள்ளவர்களுக்கான ரூ .10,000 மதிப்புள்ள அத்தியாவசிய பொதிகளை வழங்குதல் தொர்பாக அவர் விரிவாக விளக்கமளித்தார். 

 புதிய தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் சேர்ப்பது, சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை மதிப்பிடல் , பி.சி.ஆர் சோதனைகளை வகைப்படுத்துதல், குறிப்பிட்ட நெரிசலான இடங்களில் எமழுமாற்றாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை, வழக்கம் போல் பொருளாதார நடவடிக்கைகளை பராமரித்தல், புதிய தொடர்புகளை இன்னும் விஞ்ஞான முறையில் கண்டறிதல், ஆன்டிஜென் சோதனைகளை நடத்துதல், நொப்கோவில் தொடர்பாடல் தொலைபேசி சேவை போன்றவை குறித்த விவாதத்தின் போது கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவர் Reviewed by Author on November 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.