வவுனியாவில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!
அதனடிப்படையில் மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையும் அதனோடு இணைந்த இராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கியவாறு நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு அக்குழுக்கள் விஜயம் செய்துள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு வன்னி மாவட்டடத்தை மையப்படுத்தி மாவட்ட மட்டத்திலான மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோருடனான கிராமிய அபிவிருத்தி உட்கட்டமைப்பு சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம்(சனிக்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் .ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,வட மாகாண ஆளுனர் திருமதி பீ.எம் சார்ள்ஸ், கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா, கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்கள், அகழிகள் மற்றும் குடியிருப்பு, பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ பால கம்லத், கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருந்த ஆகியோருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கு. திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment