அண்மைய செய்திகள்

recent
-

அரச நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரமே சேவையாட்களை இணைத்துக்கொள்ள முடிம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தலை நொக்காக கொண்டு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

 இதனடிப்படையில், நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும், அரச நிறுவனங்களில் அத்தியாவசியமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு நிறுவன பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய அலுவலக ஊழியர்கள் தொடர்பில் நிறுவன பிரதானிகளினால் தீர்மானம் மேற்கொள்ள முடியுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார். ஏனைய ஊழியர்களை, தற்போது வீடுகளிலிருந்து பணி புரியும் முறைமையை தொடர பணிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். 

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை 9ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படவுள்ளது. எனினும் சில மாவட்டங்களின் பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதுடன், அவை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு Reviewed by Author on November 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.