அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க அதிபர் தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரச்சு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அதேபோல் துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சியின் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 3) தொடங்கியுள்ளது. 

 3-ம் தேதி தொடங்கிய உடனயே வாக்குப்பதிவு நடைபெற்றத்தொடங்கியுள்ளது. அந்நாட்டின் நியூ ஹான்ஸ்ரின் மாகாணம் டிஸ்க்விலி நாட்ச் பகுதியினர் ( நவம்பர் 3 இரவு 1 மணியளவில்) அதிபர் தேர்தலின் முதல் வாக்குகளை பதிவு செய்தனர். 12 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட டிஸ்க்விலி நாட்ச் பகுதியில் 5 பேர் வாக்களிக்க தகுதிவாய்ந்தவர்கள். டிஸ்க்விலி நாட்ச் பகுதியினர் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல ஆண்டுகளாக முதல் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பதிவான 5 வாக்குகளும் உடனடியாக எண்ணப்பட்டது.

 அதில் 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதி உள்ளது. அதன்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்து விடுவது வழக்கம். இந்த முறை கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்றும் பொதுமக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். அந்த வகையில், 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832 அமெரிக்கர்கள் தேர்தலுக்கு முன்பே வாக்களித்து உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.