பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை பிரதமர் மதிப்பீடு செய்தார்
நாட்டின் பாடசாலை அமைப்பின் ஊடாக மாத்திரம் நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் கார்பன் பேனாக் குழாய்களின் எண்ணிக்கை சுமார் 80 கிலோகிராம் ஆகும் என கௌரவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய, இதுவதை கவனம் செலுத்தப்படாத இந்த சுற்றாடல் பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பான மீள்சுழற்சி அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு, சுற்றாடல்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டது.
பாவனையின் பின்னர் ஒதுக்கப்படும் 3000 கார்பன் பேனா குழாய்கள் மற்றும் 500 பற்தூரிகைகளை இந்த ஒரு கொள்கலனில் இட முடியும்.
இந்த கொள்கலன் அனைத்து பாடசாலைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுவதுடன், INSEE நிறுவனம் மற்றும் அட்லஸ் நிறுவனத்தினால் அவை கொள்வனவு செய்யப்படவுள்ளன.
பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை பிரதமர் மதிப்பீடு செய்தார்
Reviewed by Author
on
December 04, 2020
Rating:
Reviewed by Author
on
December 04, 2020
Rating:


No comments:
Post a Comment