அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குறார்ப்பன கூட்டம் இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற அமைப்பினை இன்று உருவாக்கி உள்ளனர். இதன் அங்குறார்ப்பன கூட்டம் கொரோணா பாதுகாப்பை கருத்தில் கொண்டு இணைய வழி ஊடாக இன்று இடம்பெற்றது. இதில் புதிய நிர்வாக சபை உருவாக்கப்பட்டதுடன் எதிர் காலத்தில் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடகவியலாளர்களின் நலன்புரி நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது. 

புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக 
 1) தலைவர் - திரு. வாலசிங்கம் கிருஷ்ணகுமார் 
 2) செயலாளர் - திரு. செல்வக்குமார் நிலாந்தன் 
 3) பொருளாலர் - திரு. புண்ணியமூர்த்தி சசிகரன் 
 4) உப செயலாளர் - திரு. லோகநாதன் கஜரூபன் 
5) உப தலைவர ; - திரு. அரசரெத்தினம் அச்சுதன் 
6) இணைப்பாளர் - மட்டக்களப்பு - திரு. சுப்பிரமணியம் குணலிங்கம் 
7) இணைப்பாளர் - திருகோணமலை – திரு. பொன்னுத்துரை சற்சிவானந்தம் 
8) இணைப்பாளர் - அம்பாறை – திரு. கார்த்திகேசு 
9) பெண்கள் ஊடக இணைப்பாளர் - செல்வி.கணபதிப்பிள்ளை சூரியகுமாரி 
10) உறுப்பினர்கள் மட்டக்களப்பு - திரு. நல்லதம்பி நித்தியானந்தன், திரு. குகராசு சுபோஜன், திரு எஸ். கங்காதரன் 

 11) உறுப்பினர்கள் ; - திருகோணமலை திரு. சிவகுமாரன் ஹயக்கிரிவன், திரு. பாலேந்திரலிங்கம் விபூஷிதன் 
12) உறுப்பினர்கள்- அம்பாறை திரு. சுகிர்தகுமார், திரு. கே. குமணன், திரு. லோ. கஜரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

மேற்படி ஊடகவியலாளர் ஒன்றியம் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, மற்றும் உரிமைகள் சார்ந்து ஏனை ஊடக அமைப்புக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற உள்ளதுடன், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை வளப்படுத்தி அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.





கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குறார்ப்பன கூட்டம் இன்று நடைபெற்றது. Reviewed by Author on December 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.