சட்டவிரோதமான மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போது குறித்த ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட நீர் இறைக்கும் இயந்திரம், நீர் குழாய் மண்வெட்டி மற்றும் வயர் போன்றவற்றை மீட்க்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தெரேசியா தோட்ட பகுதியை சேர்ந்த 50, 40, 25 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பொலிஸாரினால் பினை வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் செவ்வாய்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
சட்டவிரோதமான மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
Reviewed by Author
on
December 26, 2020
Rating:

No comments:
Post a Comment